By சேகர் ராஜதுரை
என் இனியவளே !
உனக்கு என் நன்றி !
உன்
பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால்
இந்த இலை
ஒளிச் சேர்க்கை செய்யாமலே
உதிர்ந்திருக்கும்.

.....................................................

என் பெயரே
எனக்கு மறந்து போன
ஒரு
வனாந்தரத்தில்
என்னைப்
பெயர் சொல்லி அழைத்தது யார்?
நீயா ?
 
.....................................................

என்னை
ஒரு
மின்னல் கீற்று
என்றல்லவா நினைத்திருந்தேன்?
நீ எப்படி அதில்
நிரந்தரப் பாய் முடைந்தாய்?
 
.....................................................


முதலில் –
சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை.
இப்பொழுதோ –
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது.
 
.....................................................
உனக்குத் தெரியுமா?
உன்
அழகுப் பெயரை யாரோ கொஞ்சம்
அழுத்தி உச்சரித்ததால் அழுதிருக்கிறேன்.
 
.....................................................

கண்ணே !
இனி நாம்
தாஜ்மஹாலில்
சந்திக்க வேண்டாம்
ஏனெனில்
இங்கே
ஒரு பணக்கார மன்னன்
ஏழைகளின் காதலை
ஏளனம் செய்திருக்கிறான்.
5 Responses

  1. Kumar.v Says :

    பதிவுகள் நன்றாக உள்ளது .வி.குமரகுருபரன் திருவாளப்புத்தூர்


  2. Ragupathy Says :

    சத்தத்திற்கும் மௌனத்திற்கும்
    யுத்தம் நடந்தது கவிஞனின் மனதில்!
    பொருளறியா நிலை மாறி
    உரையெழுதத் தொடங்கிவிட்டான்.!


  3. Ragupathy Says :

    சத்தத்திற்கும் மௌனத்திற்கும்
    யுத்தம் நடந்தது கவிஞனின் மனதில்!
    பொருளறியா நிலை மாறி
    உரையெழுதத் தொடங்கிவிட்டான்.!


  4. காதலின் உன்னதத்தை
    கவிதையாய் தந்தற்கு
    மகிழ்ச்சியும் நன்றியும்!


Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்